;
Athirady Tamil News

நோர்வூட் : விபத்தில் சிக்கிய பேருந்து : அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..!!

0

நோர்வூட் பகுதியிலிருந்து மஸ்கெலியா பகுதியை நோக்கி தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதுண்டு பாரிய விபத்துக்குள்ளாகி உள்ளது.

இவ்விபத்து நோர்வூட் மஸ்கெலியா பிரதான வீதியில் நோர்வூட் நகரத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்

வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இன்று காலை நோர்வூட் பகுதியிலிருந்து தோட்டம் ஒன்றிக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற குறித்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.

மேலும், இதில் பயணித்த தொழிலாளர்கள் அனைவரும் எவ்வித பாதிப்பும் இன்றி அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + 18 =

*