;
Athirady Tamil News

ஆடைத்தொழிற்சாலை களஞ்சியசாலையில் தீ விபத்து..!!

0

தொம்பே, லன்சியாஹேன பகுதியில் உள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் களஞ்சியசாலையில் தீ விபத்தொன்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (18) மாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தை தற்போது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹொரண, கம்பஹா தீ அணைப்பு படையினர், பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த களஞ்சியசாலையில் தைக்கப்பட்ட ஆடைகள் மற்றும் ஆடை தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் தொம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + five =

*