;
Athirady Tamil News

வவுனியாவில் விபுலானந்த அடிகளாரின் 71வது நினைவு தினம்..!! (படங்கள்)

0

வவுனியா தமிழ் மாமன்றம் மற்றும் நகரசபையின் ஏற்பாட்டில் முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் 71வது நினைவு தினம் இனறு அனுஸ்டிக்கப்பட்டது.

தமழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா கண்டி வீதியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்தது மரியாதை செய்யப்பட்டதுடன், தமிழ் மணி அகளங்கன் அவர்களினால் சுவாமி விபுலானந்தரை பற்றிய உரையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான சந்திரகுலசிங்கம், சு.காண்டீபன், தமிழ் விருட்சத்தின் தலைவர் சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், தமிழ் மாமன்றத்தின் முக்கியஸ்தரும் வைத்திய கலாநிதியுமான செ.மதுரகன், மற்றும் வர்த்தகர்கள், வவுனியா தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 4 =

*