;
Athirady Tamil News

இலங்கைக்கு வந்த பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இடைநிறுத்தம்..!!

0

வட ஐரிஷ் பாராளுமன்ற உறுப்பினர் ஐன் பைஸ்லி, பிரித்தானிய பாராளுமன்றின் வெஸ்ட் மினிஸ்டர் சட்டங்களை மீறி செயற்பட்டமையால் அவர், 7 கிழமைகள் பாராளுமன்ற பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

2313 ஆம் ஆண்டு ஐன் பைஸ்லி, தனது குடும்பத்தினருடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்துக்கான முழுச் செலவான £ 100,000 களை இலங்கை அரசாங்கம் ஏற்றிருந்தது.

இதன் மூலம் பிரித்தானியா பாராளுமன்றின் வெஸ்ட் மினிஸ்டர் சட்டங்களை அவர் மீறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா பாராளுமன்றின் நிலையியற் குழு இதனை கண்டறிந்துள்ளது.

இதனை அடுத்து ஐன் பைஸ்லி க்கு 2018 ஆண்டு செப்டம்பர் 4 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 30 பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐன் பைஸ்லிக்கு வழங்கப்பட்டுள்ள 30 அமர்வுகளுக்கான தடை, கடந்த 15 ஆண்டுகளில் வழங்கப்பட்ட மிகப்பெரிய தண்டனையாக கருதப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + sixteen =

*