;
Athirady Tamil News

திருகோணமலையில் அசிட் வீச்சு : இருவர் வைத்தியசாலையில்..!!

0

திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியில் இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தினால் ஒருவருக்கு அசிட் வீசப்பட்ட நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.இவ்வாறு அசிட் வீச்சுக்குள்ளானவர் உப்புவெளி அலஸ்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கெலும் சந்தன (38வயது) எனவும் தெரியவருகின்றது.

அலஸ்தோட்டம் பகுதியில் இருவருக்கும் ஹோட்டல்கள் இருப்பதாகவும் அசிட் வீச்சுக்கு உள்ளானவர் மற்றைய நபரின் ஹோட்டலுக்கு சென்று தாக்குதல் நடாத்த முற்பட்ட போதே அசிட் வீசப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த தாக்குதலில் அசிச் வீச்சுக்குள்ளானவர் தன்னை தாக்கியதாக தெரிவித்து அதே சிகிச்சைப்பிரிவில் அவரும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை, அசிட் வீச்சு தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + 7 =

*