;
Athirady Tamil News

விமானநிலையத்தில் கையும் களவுமாக சிக்கிய இளம் பெண்! கம்ப்யூட்டர் ஹார்ட்டிரைவில் இருந்த மலைப்பாம்பு..!!

0

இளம் பெண் ஒருவர் தன்னுடைய லக்கேஜில் மலைப்பாம்பை மறைத்து வைத்து கடத்த முயற்சி செய்த போது, அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தின் மியாமி பகுதியில் இருக்கும் மியாமி சர்வதேச விமானநிலையத்தில் இருந்து Barbados செல்வதற்காக இளம் பெண் ஒருவர் சென்றுள்ளார்.

அப்போது விமானநிலையத்தில் இருக்கும் TSA அதிகாரிகள் அவர் கொண்டு வந்திருந்த லக்கேஜ்களை ஸ்கேன் செய்துள்ளனர்

அப்போது லக்கேஜின் உள்ளே இருந்த கம்ப்யூட்ட ஹார்ட் டிரைவில் ஏதோ ஒரு பொருள் இருப்பது போன்று தெரிந்துள்ளது.

இதையடுத்து அதிகாரிகள் அதை திறந்து பார்த்த போது, அதுனுள் சுமார் ஒரு கை நீளமுள்ள மலைப்பாம்பு இருந்துள்ளது

இதை அவர் இங்கிருந்து பர்படாசிற்கு கடத்துவதற்கு முயற்சி செய்துள்ளார் என்று பொலிசார் அவருக்கு அபராதம் விதித்து தொடர்ர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பெண் கம்ப்யூட்டர் ஹார்ட்டிரைவின் உள்ளே எப்படி மலைப்பாம்பை கடத்தி கொண்டு வந்துள்ளார் என்பது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + seven =

*