;
Athirady Tamil News

அதிவேகமாக வந்தவரை கைது செய்ய.. பூவா? தலையா போட்டு பார்த்த பெண் பொலிஸார்…!!

0

ஜார்ஜியாவில் அதிவேகமாக கார் ஒட்டிய பெண்ணை கைது செய்யலாமா? வேண்டாமா என முடிவு செய்வதற்காக பூவா?, தலையா? போட்டு பார்த்த பெண் பொலிஸார் இருவர் மீது நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஜார்ஜியாவின் Roswell பகுதியில் மழை பெய்திருந்த நேரத்தில், Sarah Webb என்ற பெண் 90கிமீ வேகத்தில் காரில் சென்றுள்ளார்.

இதனையடுத்து அவரது காரை நிறுத்திய Wilson என்ற பெண் பொலிஸார் அவரை கைது செய்ய முடிவெடுத்தார். ஆனால் Brown என்ற பெண் பொலிஸ் வேண்டாம் என கூறவே, இருவரும் பூவா?, தலையா? போட்டு பார்த்த பின்னர் Sarah-வை கைது செய்து அழைத்து சென்றனர்

பணிக்கு தாமதமாகி விட்ட காரணத்தினாலே வேகமாக சென்றேன் என அப்பெண் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், கைது செய்யப்படும்போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று தனியார் தொலைக்காட்சியில் வெளியானது

இதனை விசாரித்த நீதிமன்றம், Sarah-வை விடுதலை செய்ததோடு, இரு பெண் பொலிஸாரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 5 =

*