;
Athirady Tamil News

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது..!!

0

புத்தளம் தில்லையடி பிரதேசத்தில் 02 கிராமும் 560 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப் பொருளுடன், இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை புத்தளம் விஷத் தன்மையுடைய போதை தடுப்பு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்கள் வேறு பிரதேசங்களில் இருந்து ஹெரோய்ன் கெண்டுவந்து அந்த பிரதேசத்தில் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்று புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + 4 =

*