;
Athirady Tamil News

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு ஐவர் கைது..!!

0

இராஜகிரிய பகுதியில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி சுற்றுவளைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் மதியம் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெலிகட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

வெலிகட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டை வீதி இராஜகிரிய பகுதியில் பல நாட்களாக ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு, அதன் முகாமையாளர் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது பொலன்னறுவை, அநுராதபுரம், மதிரிகிரிய மற்றும் மினுவாங்கொடையைச் சேர்ந்த 21,22,29,35 மற்றும் 40 வயதுகளையுடைய ஐந்து பெண்களே இவ்வாறு கைதுசெய்யபபட்டுள்ளனர்.

மேலும் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட ஐவரையும் நேற்று 4 ஆம் இலக்க அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்ததுடன், வெலிகட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − eight =

*