;
Athirady Tamil News

1000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது..!!

0

1000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட கிரிபத்கொடபொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மா​ெகால தெற்கு கிரிபத்கொட பிரதேசத்தில் நபர் ஒருவரிடமிருந்த கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து குற்றத்திற்காக சாரதி ஒருவரிடம் பெறப்பட்ட அனுமதிப் பத்திரத்தை மீள வழங்குவதற்காக இந்த இலஞ்சம் பெறப்பட்டுள்ளது.

இலஞ்சத்தை பெற்றுக் கொள்ளும் போது கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் வைத்து இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதுடன், விசாரணைகளின் பின்னர் அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − four =

*