;
Athirady Tamil News

உக்ரைன் எல்லையில் இலங்கையர்கள் உட்பட் 13 பேர் கைது..!!

0

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளை சேர்ந்த 13 சட்டவிரோத குடியேறிகளை உக்ரைனின் லிவிவ் மற்றும் லுட்ஸ்க் எல்லை பகுதியில் கைது செய்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எந்த ஆவணங்களும் இல்லாத நிலையில் 6 வெளிநாட்டவர்களும், மேலும் 2 பேர் மேற்கு பேர்க் நதியை கடக்க முற்பட்டுள்ளனர்.

இதனை எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இராணுவத்தினர் கண்ட போது, அவர்கள் உடனடியாக போலாந்து நாட்டு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவல் வழங்கப்பட்டதை அடுத்து போலாந்து நாட்டு எல்லைக் பகுதி இராணுவத்தினர், நதியை கடக்க முயன்ற 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் ரஷ்ய மற்றும் அசர்பைஜானை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 5 இலங்கையர்களையும் இந்தியர் ஒருவரையும் அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தமை தெரிய வந்தது.

இந்நிலையில், போலாந்து நாட்டு எல்லைக் பகுதி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்கள் உக்ரைனுக்கு மீண்டும் அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − four =

*