;
Athirady Tamil News

அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்த பெண் கைது..!!

0

அவுஸ்திரேலியாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி நாட்டில் பல நபர்களிடம் சுமார் ஒரு கோடி ரூபா நிதி மோசடி செய்த பெண் ஒருவர் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விஷேட விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வளாகத்திற்கு அருகில் பனாகொட பிரதேசத்தைச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடமிருந்து 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கடவுச்சீட்டு என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது வெவ்வேறு நபர்களிடம் 98 இலட்சம் ரூபா நிதி மோடி செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 4 =

*