;
Athirady Tamil News

1.6 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் இலங்கையர் கைது..!!!

0

1.6 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கடத்த முயற்சி செய்த இலங்கையர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலை 1.55 மணி அளவில் இலங்கைக்கு வருகை தந்த குறித்த நபர், அக்குரன பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரிடம் இருந்து 252.73 கிராம் எடையுள்ள தங்க சங்கிலிகள் மற்றும் ஒரு கைச்சங்கிலி என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

இவற்றின் பெறுமதி சுமார் 1,642,745 ரூபா எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபருக்கு 100,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − seven =

*