;
Athirady Tamil News

ரயிலுடன் செல்பி ; 3000 வாட் மின் கம்பியில் சிக்குண்ட சிறுமி..!! (வீடியோ)

0

ரயில் பாலத்திலிருந்து செல்பி எடுக்கச்சென்ற சிறுமி கால் தவறி 3000 வாட் மின் கம்பியில் சிக்குண்டு உயிருடன் மீண்ட சம்பவம் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.

மத்திய ரஸ்யாவை சேர்ந்த 13 வயது சிறுமியே இவ்வாறு அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

சம்பவ தினத்தன்று குறித்த சிறுமி ஆற்றில் நீராடி விட்டு வீடுக்கு திரும்பு வழியில் சரக்கு ரயில் வருவதை அவதானித்து அதனுடன் பாலத்திலிருந்து செல்பி எடுக்க சென்றுள்ளார்.

குறித்த வேளையில் அவர் கால் தடுமாறி 3000 வாட் மின் கம்பியில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் நடந்து சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு பின்னராக அப்புகையிரத பாதையின் ஊடாக பயணித்த ரயிலினை செலுத்திய ஓட்டுனர், குறித்த சிறுமியினை கண்டுள்ளதோடு ஊடனடியாக செயற்பட்டு ரயிலினை நிறுத்தியுள்ளார்.

மேலும், கட்டுபாட்டு அறைக்கு அழைப்பினை மேற்கொண்டு மின்சார இணைப்பினையும் துண்டித்துள்ளார்.

4அவ்வேளையில் அங்கிருந்த அலெக்சாண்டர் என்ற நபரொருவர் குறித்த சிறுமியினை மின் கம்பியிலிருந்து மீட்டுள்ளார். தனது பெயர் மற்றும் விலாசத்தினை தெரிவித்தவாறு அச்சிறுமி அவ்விடத்திலேயே சுயநினைவினை இழந்தார் என அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பலத்த எரிக்காயங்களுக்குள்ளான சிறுமி அவ்விடத்திலிருந்து ஒரு இளைஞனின் உதவியுடன் வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிர்ஷவசமாக உயிர் பிழைத்த அச்சிறுமி கண் விழித்தவேளையில் தனக்கு என்ன நிகழ்ந்தது என்று எதுவும் நினைவில் இல்லையென தெரிவித்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − 1 =

*