;
Athirady Tamil News

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ளக வீதிகளுக்கு பெயர்பலகை நாட்டல்..!!

0

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள உள்ளக வீதிகளுக்கு பெயர்பலகை நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபைக்குட்பட்ட
மகாறம்பைக்குளம் வட்டாரத்தின் உள்ளக வீதிகளுக்கு பெயர்பலகை நாட்டப்பட்டது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வட்டார தலைவர் சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்

ப.சத்தியலிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம், வட்டார பிரதேச சபை உறுப்பினர் த.யோகராசா தமிழ் அரசுக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ந.கருணாநிதி உட்பட கிராம அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 16 =

*