;
Athirady Tamil News

இலங்கை அணி 277/9 – கேஷவ் மஹாராஜ் 8 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்..!!

0

இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று (20) ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களம் இறங்கிய இலங்கை அணி முதலாம் நாள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக தனஞ்சய டி சில்வா 60 ஓட்டங்களையும் தனுஷ்க குணதிலக 57 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 53 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் தென் ஆபிரிக்க அணி சார்பில் கேஷவ் மஹாராஜ் 32 ஓவர்கள் பந்துவீசி, 6 ஓட்டமற்ற ஓவர்களுக்கு 116 ஓட்டங்களை கொடுத்து 8 விக்கெட்டுக்களை பெற்றமை ஒரு விசேட அம்சமாகும்.

இரு அணிகளுக்கும் இடையில் காலியில் நடைபெற்ற 1 வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வெற்றி கொண்டு, இலங்கை அணி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 11 =

*