;
Athirady Tamil News

சொந்த பிள்ளைகள் உள்ளிட்ட 20 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த நபர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

0

சுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் மாகாணத்தில் சொந்த பேரப் பிள்ளைகள் உள்ளிட்ட 20 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சோலோதுர்ன் மாகாணத்தில் குடியிருக்கும் 70 வயது நபரே தமது பேரப்பிள்ளைகள், உறவினர்கள் உள்ளிட்ட சுமார் 20 சிறுவர்களை கடந்த 15 ஆண்டுகளாக துஷ்பிரயோகம் செய்து வந்தவர்

மட்டுமின்றி குறித்த நபர் சிறுவர்களை நிர்வாணமாகவும், ஆபாசமாகவும் வீடியோ எடுத்தும் வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த வீடியோக்களை அவர் பலருக்கும் கைமாறியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் விற்பனை செய்துள்ளதாக விசாரணையில் உறுதிப்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது.

கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் கடைசியாக 2013 ஆம் ஆண்டு வரை குறித்த நபர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் மாவட்ட நீதிமன்றம் திங்களன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதில் குறித்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் நன்னடத்தை சோதனை காலமாக 5 ஆண்டுகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நாள் ஒன்று 90 பிராங்குகள் என 30 நாட்கள் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் வழக்கறிஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அந்த நபரால் சிறு வயதில் பாதிக்கப்பட்டு தற்போது 28 வயதாகும் அவரது உறவினர் இளம்பெண் ஒருவர், அவரது செயலுக்கான தண்டனையை நீதிமன்றம் வழங்கவில்லை என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + 15 =

*