;
Athirady Tamil News

8 வயது சிறுமியை ஆவேசத்துடன் தாக்கிய கழுகு: திகிலூட்டும் வீடியோ..!!

0

மத்திய ஆசியாவில் உள்ள கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற பாரம்பரிய விழா ஒன்றில் மிகப்பெரிய கழுகு ஒன்று 8 வயது சிறுமியை ஆவேசத்துடன் தாக்கிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலைப்பிரதேச நாடான கிர்கிஸ்தானில் போட்டிக்காக வளர்த்தப்படும் பாரம்பரிய விழாவானது சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த விழாவில் அப்பகுதியில் உள்ள திரளான மக்கள் கண்டுகளிக்க குழுமியிருந்தனர். இச்சமயத்தில் golden eagle இனத்தை சேர்ந்த கழுகு ஒன்று தமது காப்பாளரிடம் இருந்து பறந்து சென்று ஆவேசத்துடன் 8 வயது சிறுமியை தாக்கி பின்னர் இரையென கருதி தூக்கிச் சென்றுள்ளது

திகிலூட்டும் இச்சம்பவம் பார்வையாளர்களை கடும் அதிர்ச்சியில் ஒரு கணம் தள்ளியுள்ளது.

Issyk-Kul மாகாணத்தில் நடைபெற்ற இச்சம்பவம் தற்போது காணொளியாக வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

கழுகை அனுப்பி வேட்டையாடுவது தொடர்பான இந்த பாரம்பரிய விழாவானது ஆண்டு தோறும் கிர்கிஸ்தான் நாட்டின் Issyk-Kul மாகாணத்தில் நடைபெற்று வருவது வழக்கம்

இந்த நிலையிலேயே சிறுமிக்கு இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட காப்பாளர்கள் சிறுமியை கழுகிடம் இருந்து மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சிறுமியின் முதுகுபக்கம் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − 3 =

*