;
Athirady Tamil News

மிருகக்காட்சி சாலையிலிருந்து தப்பிய சிறுத்தைப்புலி: எட்டு விலங்குகள் பலியான சோகம்..!!

0

மிருகக்காட்சி சாலையிலிருந்து தப்பிய சிறுத்தைப்புலி எட்டு விலங்குகளைக் கொன்ற பரபரப்பு சம்பவம் அமெரிக்காவின் New Orleansஇல் நடை பெற்றுள்ளது.

Audubon மிருகக்காட்சி சாலையில் Valerio என்று பெயரிடப்பட்ட 3 வயது சிறுத்தைப்புலி தனது கூண்டுக்கு வெளியில் நிற்பதை மிருகக்காட்சி சாலை ஊழியர் ஒருவர் கண்டார்.

அதற்குள் அந்த சிறுத்தைப்புலி ஐந்து alpacas என்னும் விலங்குகள், இரண்டு நரிகள் மற்றும் ஒரு ஈமு ஆகியவற்றைத் தாக்கிக் கொன்றது.

தக்கப்பட்ட இன்னொரு நரியின் நிலைமையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டாலும் திங்கட்கிழமை காலை அதுவும் உயிரிழந்தது.பின்னர்

விலங்குகள் நல மருத்துவர்கள் குழு ஒன்று மயக்க ஊசி மூலம் சிறுத்தைப்புலியைப் பிடித்து அதன் கூண்டில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தில் மனிதர்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.பழுதடைந்திருந்த கூண்டின் கூரை வழியாகவே அந்த சிறுத்தைப்புலி தப்பியதாகத் தெரிய வந்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + two =

*