;
Athirady Tamil News

இருபதில் பிரிந்த ஜோடி நாற்பதில் இணைந்த நெகிழ்ச்சிக் காதல் சம்பவம்..!!

0

பிரித்தானியாவில் தங்கள் இருபதுகளில் இருக்கும்போது பிரிந்த ஒரு ஜோடி தங்கள் நாற்பதுகளில் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

Mairi Gordonம் Rhys McLellanம் சில கால முதிர்ச்சியடையாத காதலுக்குப்பின் 1995ஆம் ஆண்டு பிரிந்தார்கள்.

40 வயதாகும்போதும் தாங்கள் இருவரும் திருமணம் செய்யாமல் இருந்தால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று வேடிக்கையாக கூறியபடியே பிரிந்தார்கள் இருவரும்

இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பு இருந்தாலும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை இருவரும். 2010ஆம் ஆண்டு தற்செயலாக Rhysஇன் தாயை சந்தித்த Mairi அவரது போன் நம்பரை வாங்கிக் கொண்டார்.

மீண்டும் இருவரும் சந்தித்தாலும், இடைக்காலத்தில் ஏற்பட்ட உறவுகளும் பிரிவுகளும் ஏற்படுத்திய காயங்கள் மீண்டும் புதிய ஒரு உறவை ஏற்படுத்த தயக்கத்தை ஏற்படுத்தின.

இதற்கிடையில் Rhysஇன் தாயார் உடல் நலம் பாதிக்கப்பட, மீண்டும் சந்தித்துக் கொண்டார்கள் இருவரும்

2015ஆம் ஆண்டு Mairiக்கு ஒரு விபத்து ஏற்பட்டபோது Rhys கூட இருந்து அவரை நன்றாக கவனித்துக் கொண்டார்

இவ்வளவு நாட்களாக தணலாக மனதில் மறைந்திருந்த காதல் மெல்ல எட்டிப்பார்த்தது. Rhysதான் தனக்கு எல்லாம் என்பதைப் புரிந்து கொண்டார் Mairi. Rhysசோ, Mairiதான் எப்போதுமே தன் காதலி என்றார்.

இரண்டு ஆண்டுகளுக்குப்பின் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். உன்னுடையது எதுவோ அது உன்னை விட்டுப் போகாது என்று தன் தாய் அடிக்கடி கூறுவதை இப்போதும் நினைவு கூறுகிறார் Mairi

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − six =

*