;
Athirady Tamil News

கட்டுமான தொழிலாளர்கள் நல்வாழ்வு திட்டத்தை செப். 30-க்குள் இறுதி செய்ய வேண்டும்- சுப்ரீம் கோர்ட்..!!

0

நாடு முழுவதும் கட்டிட மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கான நல்வாழ்வு திட்டம் ஒன்றை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல், கட்டுமான தொழிலாளர்கள் நல்வாழ்வுக்கான வரைவு திட்டத்தை மத்திய தொழிலாளர் அமைச்சக இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாகவும், மாநிலங்களிடம் இருந்து யோசனைகளை பெற்ற பிறகு, செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அத்திட்டம் இறுதி செய்யப்படும் என்றும் கூறினார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், செப்டம்பர் 30-ந் தேதிக்குள் நல்வாழ்வு திட்டத்தை இறுதி செய்ய வேண்டும் என்றும், அதன்பிறகு கால நீட்டிப்பு அளிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × two =

*