;
Athirady Tamil News

பிரியாவிடை நிகழ்வால் பாடசாலையில் குழப்பம்! கண்ணாடிக்கும் கல்வீச்சு..!!

0

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் உயர்தர இறுதி ஆண்டு மாணவர்களிற்கான பிரியாவிடை நடாத்துவதில் மாணவர்களிற்கும், பாடசாலை நிர்வாகத்தினருக்கும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெரியவருகையில் இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களிற்கு பிரியாவிடை நிகழ்வு நடைபெறாத காரணத்தால் மாணவர்கள் இது தொடர்பாக ஆசிரியர் ஒருவரிடம் கேட்டதாகவும் நிகழ்வு நாடத்துவதென்றால் நீங்கள் ஒழுக்கமான முறையில் பாடசாலைக்கு வரவேண்டும் என்று கூறி நிகழ்வை நாடத்தாமல் இருந்துள்ளனர்.

இதனால் மாணவர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டது. பின்னர் கடந்த செவ்வாய்கிழமை இனம்தெரியாத நபர்களால் இரவு பாடசாலைகட்டடத்தின் கண்ணாடி கல் எறிந்து உடைக்கபட்டதுடன், பாடசாலையின் சுவர் மீதும் அனாகரிகமான வசனங்கள் எழுதப்பட்டிருந்தது. இதனால் நேற்றயதினம் பாடசாலை அதிபர், மாணவர்கள் மற்றும் பெற்றோர், பழையமாணவர்கள் ஆகியோர் பாடசாலையில் ஒன்று கூடி கலந்துரையாடியதுடன், குழப்ப நிலை ஒன்றும் ஏற்பட்டிருந்தது.வழைமையாக படாசாலைகளால் நடாத்தபடும் நிகழ்வை நடத்துமாறு பெற்றோர்கள், பழையமாணவர்கள் கோரி வருவதோடு பாடசாலை நிர்வாகத்தினால் அதற்கு ஒத்துழைக்க மறுப்பதாக அவர்களால் குற்றம்சாட்டபடுகின்றது.

இது தொடர்பாக இம்முறை உயர்தரபரீட்சையில் தோற்றும் மாணவர்கள் கூறும் போது தாம் நிகழ்வு நடத்துமாறு கோரியபோது தலைமயிர், தாடி என்பவற்றை சீராக்கிவிட்டு வருமாறு அதிபரால் கூறப்பட்டது. இதனால் குழப்பம் ஏற்பட்டதுடன் அன்றிரவு இனம் தெரியாத நபர்களால் குறித்த கண்ணாடி உடைக்கபட்டு சுவரில் எழுதப்பட்டதாகவும் அதற்கும் எமக்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறினர். அத்துடன் இனிமேல் எமக்கு பிரியாவிடை நிகழ்வு நடாத்தவேண்டாம் என்று அனுமதி அட்டைகளை பெற்றுசென்றதாகவும் கூறினர்.

இது தொடர்பாக பாடசாலையின் அதிபரிடம் கேட்டபோது நாம் நிகழ்வை நாடத்துவதாகவே இருந்தோம் சில மாணவர்களை ஒழுக்கமான முறையில் நடந்துகொள்ளுமாறு கூறினோம் இதனாலேயே பிரச்சனை ஏற்பட்டு கண்ணாடி உடைக்கபட்டதாகவும் கூறினார்.அத்துடன் நாம் பழையமாணவர்சங்கத்துடன் பேசி வருவதாகவும் நிகழ்வை நடாத்துவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் கூறினார். இந்நிலையில் கண்ணாடியை உடைத்தவர்கள் அதனை வாங்கி தருவதாக கூறியதுடன் மதில்சுவரையும் சுத்தமாக்கி வருவதாக தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 1 =

*