;
Athirady Tamil News

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை..!!

0

அளுத்கம, தர்கா நகர் பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகளிடையே ஏற்பட்ட வாய்தர்க்கம் தீவிரமடைந்ததையடுத்து இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அளுத்கம, சீனவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கொலை தொடர்பில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + twelve =

*