;
Athirady Tamil News

அமெரிக்க முன்னாள் அதிபருக்கு சிகிச்சை அளித்த இதயநோய் மருத்துவர் சுட்டுக்கொலை..!!

0

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபுள்யு.புஷ்சுக்கு சிகிச்சை அளித்த இதயநோய் சிகிச்சை நிபுணர் மார்க் ஹாஸ்க்நெக்ட் (வயது 65). இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். டெக்சாஸ் மருத்துவ மையம் அருகே சென்றபோது, அவரை நோக்கி அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த டாக்டரை, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்துபோனார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.

டாக்டர் மறைவைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு புஷ் இரங்கல் தெரிவித்துள்ளார். ஜார்ஸ் எச்.டபுள்யு. புஷ்சுக்கு 2000-ம் ஆண்டில் இதய நோய் தொடர்பாக டாக்டர் மார்க் சிகிச்சை அளித்ததாகவும், அதன்பின்னர் இருவரும் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்ததாகவும் புஷ் குடும்ப செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 2 =

*