;
Athirady Tamil News

கேரளாவில் காப்பகத்தில் 2 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை- 3 பேர் கைது..!!

0

கேரள மாநிலம் கொச்சியில் இயங்கி வந்த ஒரு காப்பகத்தில் 2 மைனர் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை நடந்ததாக குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

இது தொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் கொச்சி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், மைனர் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அங்கிருந்த 19 வயது சிறுவன் என கண்டுபிடித்து கைது செய்தனர்.

மேலும் இச்சம்பவம் பற்றி தெரியவந்தும் காப்பக இயக்குனர் மற்றும் ஊழியர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காததால், குற்றத்தை மறைத்தது தொடர்பான குற்றச்சாட்டில் அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் கூறும்போது, காப்பகத்திற்கு வழக்கமான ஆய்வுக்கு சென்றபோது மைனர் சிறுவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்தனர்.

இதனை நாங்கள் போலீசாரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க கூறினோம். அதன்படி, மைனர் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 19 வயது சிறுவனும் இச்சம்பவத்தை மறைத்த குற்றத்திற்காக காப்பக இயக்குனர் மற்றும் ஊழியரும் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 1 =

*