;
Athirady Tamil News

தாச்சிச்சங்க நடுவர்களுக்கான புதிய விதிமுறைகள் வெளியீடு..!! (படங்கள்)

0

தாச்சிச்சங்க நடுவர்களுக்கான புதிய விதிமுறைகள் வெளியீடு – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வெளியிட்டு வைத்தார்.

யாழ்.மாவட்ட தாச்சிச்சங்கத்தினால் தயாரிக்கப்பட்ட தாச்சி விளையாட்டு நடுவர்களுக்கான புதிய விதிமுறைகள் அடங்கிய கையேட்டை வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் வெளியிட்டு வைத்தார்.

இன்று 21.07.2018 சனிக்கிழமை மாலை 2.30 மணியளவில் யாழ்.மாவட்ட தாச்சிச்சங்க தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்விலேயே வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டு மேற்படி நடுவர்களுக்கான புதிய விதிமுறைகள் அடங்கிய கையேட்டை வெளியிட்டு வைத்தார்.

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினருடன், யாழ்.மாவட்ட தாச்சிச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிர்வாகிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 4 =

*