;
Athirady Tamil News

யாழ் மாவட்ட கமநல சேவை நிலையத்திற்கு அங்கஜன் இராமநாதன் விஜயம்..!! (படங்கள்)

0

யாழ் மாவட்ட கமநல சேவை நிலையத்திற்கு விவசாய பிரதி அமைச்சராக பதவியேற்றதன் பின்பு முதல் முறையாக கௌரவ அங்கஜன் இராமநாதன் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார் .

யாழ் மாவட்ட ஆணையாளர் நிசாந்தன் விவசாய துறைசார் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தவர்கள் சமிபிரதாயபூர்வமாக வரவேற்றிருந்தனர் .

தொடர்ந்து அதிகாரிகளுடன் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும்,எவ்வாறான நடைமுறைகளை கையாளலாம்,துறை சார் நிபுணர்களின் வெற்றிடம்,மற்றும் ஆளணி வளம் குறித்தும் அதிகாரிகளினால் அங்கஜன் இராமநாதன் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
விவசாய அதிகாரிகள் தமது அனுபவரீதியிலான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர் .

இதே வேளை

யாழ் மாவட்ட விவசாய கமக்கார அமைப்புக்களின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

யாழ் மாவட்ட கமநல திணைக்கள சபா மண்டபத்தில் , கமநல ஆணையாளர் நிசாந்தன் தலைமையில் இடம்பெற்றிருந்தது
விவசாயிகளின் தற்போதைய நிலைமை குறித்தும் எதிர்நோக்குகின்ற பிரைச்சனைகளுக்கு உரியவகையில் இனம் காண்பதன் மூலம், எவ்வாறான நடைமுறைகளை கையாண்டு நிரந்தரமான தீர்வுகளை ஏற்படுத்தலாம் என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

விவசாயிகள் தமது பிரைச்சினைகளை அனுபவரீதியாகவும் எடுத்து கூறியதுடன்,வரலாற்றில் முதல் தடைவையாக தமிழ் விவசாய அமைச்சருடன் இலகுவான முறையில் சிறந்த புரிதல்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக விவசாய பெருமக்கள் சார்பில் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + four =

*