;
Athirady Tamil News

வவுனியாவில் முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் காயம்..!! (படங்கள்)

0

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் உட்பட நால்வர் இன்று (21) காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா கணேசபுரம் பகுதியில் இருந்து முருகனூர் நோக்கி சென்ற முச்சக்கரவண்டி கோவில்குளம் இந்துக்கல்லூரிக்கு அருகில் சென்றுகொண்டிருந்த போது வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மின்சார கம்பத்துடன் மோதுண்டதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியை ஓட்டிச்சென்ற சாரதி உட்பட பெண் ஒருவரும் படுகாயமடைந்துள்ளதுடன், 9 வயது சிறுவனும், பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + nine =

*