;
Athirady Tamil News

வவுனியாவில் அரச கட்டிடம் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படாமல் பழடைந்து செல்கிறது..!! (படங்கள்)

0

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கப்பாச்சி கிராமத்தில் பாரிய நிதியில் கட்டப்பட்ட அரச கட்டிடம் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படாமல் பாழடைந்து செல்கிறது என கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

செட்டிக்குளம் நகரப்பகுதியிலிருந்து ஆறு கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கப்பாச்சி கிராமம் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட கிராமமாக காணப்படுகின்றது.

கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து அவசரமாக கட்டப்பட்ட இக்கட்டிடத்தை என்ன தேவைக்கு பாவிப்பது என்ற இழபறியின் காரணமாக கட்டிடம் மக்கள் பாவனைக்கு வழங்கப்படாத நிலையில் கட்டிடம் பாழடைந்து செல்கிறது இக்கட்டிடத்தை பாடசாலையாக கூட மாற்றி வழங்க முடியும் என கிரம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இக் கிராமத்தில் மக்கள் பாவனைக்காக 2008 ஆம் ஆண்டு ஜேர்மன் நாட்டின் நிதிப்பங்களிப்புடன் 80 இலட்சம் ரூபாவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடமானது கவனிப்பாரற்ற நிலையில் பாழடைந்து செல்வதாகவும் கிராமத்தில் ஆண்கள் தொழில்களை நாடி நகரப்புறங்களுக்கு செய்வதனால் கிராமத்தின் அபிவிருத்தியில் பங்கெடுக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும், அரச அதிகாரிகள் இக்கட்டிடத்தை கண்டு கொள்வதில்லை எனவும் மக்கள் விசனம் வெளியிட்டனர்.

அத்துடன் கப்பாச்சி கிராமத்தின் கூட்டுறவுச் சங்கமானது 1996 ஆம் ஆண்டு கட்டப்பட்ட நிலையில் இரண்டு வருடங்களே இயக்கப்ட்டது அதன் பின் இக் கூட்டுறவுச் சங்கத்தின் கட்டிடமும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாகம் கூட்டுறவுச் சங்கத்தை கிராமத்தின் நலனுக்காக மீண்டும் இயங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கிராமத்தின் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 4 =

*