;
Athirady Tamil News

வடகிழக்குப் பிரதேச தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கழகங்களின் ஒன்றியம் உருவாக்கம்..!! (படங்கள்)

0

வடக்கு கிழக்கு மாகாணங்களின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கழகங்களின் ஒன்றியம் வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்ரீம் எஸ்ஈஓ இன்ரநெட் சொலுஷன் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தலைமையில் வவுனியா பிரின்ஸஸ் ரோஸ் தங்ககத்தில் சனிக்கிழமை (21)நடைபெற்ற நிகழ்வில் இந்த ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா நகரசபைத் தலைவர் ஆர்.கௌதமன், ஸ்லாஸ்கொம் நிறைவேற்றுப் பணிப்பாளர் கிறிஷாந்த், ஐசிரிஏ திட்டப்பணிப்பாளர் அகமட் ஆகியோரும் தகவல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

வடகிழக்குப் பிரதேச தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கழகங்களின் ஒன்றியத் தலைவராக எக்ஸ்ரீம் எஸ்ஈஓ இன்ரநெட் சொலுஷன் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சரண்யன் சர்மா தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணங்களுகக்கான பிராந்திய தலைவர்களும், பிராந்திய நிறைவேற்றுப் பணிப்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

ஒன்றியத்தின் வவுனியா பிராந்திய தலைவராக வவுனியா பொன்வீடிர்யா நிறுவன பணிப்பாளர் பொன் சுபாஸ்சிங்கம், யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பிராந்திய தலைவராக திருமதி கிருத்திகா கோகுலன், அம்பாறை பிராந்திய தலைவராக இம்ரான், மட்டக்களப்பு பிராந்திய தலைவராக ரஜீவ், திருகோணமலை பிராந்திய தலைவராக கெலும் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தகவல் தொழில்நுட்பத்தை மூலதனமாகக் கொண்டு செயற்படுகின்ற மென்பொருள் மற்றும் வன்பொருள் வணிகத்துறை நிறுவனங்கள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், புகைப்படத்துறை, சினிமாத்துறை, அச்சு மற்றும் இணைய துறைசார்ந்த நிறுவனங்களும், இந்தத் துறைகளைச் சேர்ந்த தனிநபர்களும் வடகிழக்குப் பிரதேச தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கழகங்களின் ஒன்றியத்தின் உறுப்பினர்களாக இணைந்து கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 18 =

*