;
Athirady Tamil News

ஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு..!!

0

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் ஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் இன்று(சனிக்கிழமை) பிற்பகல் மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆற்று பகுதியில் சடலமொன்று மிதப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

காட்மோர் தோட்டம், லாட்ஜ்வில் பிரிவைச் சேர்ந்த 69 வயதுடைய சங்குப்பிள்ளை பெரியக்கா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் மரண விசாரணைகளின் பின்னர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − two =

*