;
Athirady Tamil News

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறையுடன் செயற்படுகின்றோம்: பிரதமர்..!! (வீடியோ)

0

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனில் அரசாங்கம் தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சிக்கு இன்று (சனிக்கிழமை) விஜயம் செய்திருந்த பிரதமர், அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், “யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் நீங்கள். உங்களின் நலன் சார்ந்து அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. உங்கள் நலனுக்காக நாம் பல திட்டங்களை மேலும் முன்னெடுத்து செல்லவுள்ளோம்.

இப்பகுதி மக்களுக்காக நாம் வீட்டுத்திட்டங்களை வழங்கவுள்ளோம். அதனைவிட போக்குவரத்து வசதிக்காக பல வீதிகளை அமைக்கவுள்ளோம்.

குறிப்பாக பூநகரி, மன்னார் மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பகுதிளில் நெடுஞ்சாலை ஒன்றை அமைக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அத்துடன், புதிய சுற்றுலா மையங்களை உருவாக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக மேலும் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது” என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six − six =

*