;
Athirady Tamil News

இரவில் தாமதமாக உண்பவரா நீங்கள்?..!!

0

நிதானமாக வாழும் காலமெல்லாம் மாறிப்போய்விட்டது. இன்று மனிதன் இயந்திரமாக ஓடத் தொடங்கி விட்டதால் நம் அன்றாட பழக்க வழக்கங்கள் எல்லாம் மறைந்துக் கொண்டுள்ளது.

நோயில்லா வாழ்வுதான் குறைவற்ற செல்வம் என்பதை நாமறிந்தாலும். குறைவற்ற செல்வத்தை பலர் கைநழுவ விட்டு, நோயின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். அன்றாடம் நம் உடலுக்கு 8 மணிநேரம் தூக்கம் என்பது மிகவும் அவசியம்

அதுபோல் இரவு 9 மணிக்குள் சாப்பிட்டு முடித்து விட வேண்டும்.
இரவு தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு சாப்பிடுவதால் மார்பக மற்றும் புரோஸ்டேட் கேன்சர் வருவதற்கான ஆபத்து குறைவாக உள்ளதென ஆய்வு கூறுகிறது.

முறையற்ற உணவு பழக்கம் உள்ளவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான ஆபத்து 20 சதவீதம் அதிகமாக உள்ளதென ஆய்வு முடிவு கூறுகிறது.

முறையான உணவு பழக்கம் இல்லாதவர்களுக்கு, இரவு 10 மணிக்கு மேல் சாப்பிடுவர்களுக்கு அல்லது இரவு நேர வேலை பார்ப்பவர்களுக்கும் உடலின் செரிமான பிரச்சினை தோன்றுகிறது.

முறையற்ற உணவு பழக்கம், இரவில் தாமதமாக சாப்பிடுவது போன்ற பழக்க வழக்கத்தால் உடலியல் இயக்கத்தின் வழக்கமான செயல்முறைகள் மாறுவதால் நோய்க்கூறுகள் உருவாகும் இடமாக நம் உடல் மாறிவிடுகிறது.
முறையான உணவுப் பழக்கமும் சரியான தூக்கமும் உள்ள வாழ்வியல் முறை நோயற்ற வாழ்வை உறுதி செய்யும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 3 =

*