;
Athirady Tamil News

சொந்த கிராமத்தில் பாட்டியுடன் குத்தாட்டம்… வைரலாகும் ஒபாமாவின் நடன வீடியோ..!!

0

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா கென்யாவில் தனது சொந்த கிராமத்திற்கு சென்று அங்கு தனது பாட்டியுடன் நடனமாகியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சொந்த ஊர், கென்யாவில் உள்ள கொகிலோ என்ற கிராமம் தான். இங்கு ஒபாமாவின் பாட்டி, சகோதரி மற்றும் அவரது குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

கொகிலோ கிராமத்தில் தன் சகோதரி அவுமா ஒபாமா ஆரம்பித்துள்ள இளைஞர் நல மற்றும் விளையாட்டுப் பயிற்சி மைதானத்தை துவக்கி வைப்பதற்காக, 30 வருடங்களுக்கு பிறகு வருகை தந்திருந்த ஒபாமாவிற்கு அங்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

கிராமமே திருவிழா கோலம் பூண்டு, ஒபாமா, மிச்செல் மற்றும் அவரது மகள் வருகையினை உற்சாகமாக கொண்டாடினர். அப்பொழுது நடைபெற்ற நிகழ்ச்சியின் இடையே பாரம்பரிய இசை ஒலிக்கப்பட்டது.

இதனை கேட்ட ஒபாமா உடனடியாக எழுந்து பாட்டியுடன் நடனமாட ஆரம்பித்தார். இந்த வீடியோ காட்சி தற்போது இணையதளங்களை கலக்கி கொண்டிருக்கிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 3 =

*