;
Athirady Tamil News

சுவிட்சர்லாந்தில் அடிப்படை வசதிகள் உதவியாக பெறும் அகதிகளின் எண்ணிக்கை கடும் சரிவு..!!

0

சுவிட்சர்லாந்தில் அடிப்படை நிதி உதவி பெறும் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை 20 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் தங்கும் வசதி, உணவு, உடைகள் அல்லது மருத்துவ உதவி என வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டில் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிகள் சுமார் 8,000 பேருக்கு குறித்த அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இது சுமார் 60 மில்லியன் பிராங்குகள் அளவுக்கு என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இது 20 விழுக்காடு குறைவு எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக 785 அகதிகள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு அவர்களுக்கு குறித்த உதவிகளை வழங்கியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் புகலிட கோரிக்கை விடுத்துள்ள எரித்திரியா, எத்தியோப்பியா, அல்ஜீரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து மொத்தமாக 31 விழுக்காடு மனுக்களை நிராகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நீண்ட கால உதவிகள் பெறும் அகதிகள் எண்ணிக்கையானது 3,068 என இருந்தது. மட்டுமின்றி 2017 ஆம் ஆண்டு புகலிட கோரிக்கை விடுத்த அகதிகளின் எண்ணிக்கை சுமார் 18,088 எனவும் கூறப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + five =

*