;
Athirady Tamil News

பிரித்தானிய அரச குடும்பத்து உறுப்பினர்களின் செல்லப் பெயர்கள் என்ன என்பது தெரியுமா?..!!

0

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசர் வில்லியம் உள்ளிட்டவர்களின் செல்லப்பெயர்கள் என்ன என்பது தற்போது வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் அரியணையில் மிக நீண்ட காலமாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருபவர் இரண்டாம் எலிசபெத் மகாராணியார்.

இவரை அவரது குடும்ப உறுப்பினர்கள் செல்லப்பெயர்கள் வைத்து அழைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மகாரா

ணியாரை அவரது கணவர் இளவரசர் பிலிப் உற்சாகமிகுதியாக இருக்கும்போது Sausage என குறிப்பிடுவதாக கூறப்படுகிறது.

ஆனால் இளவரசர் வில்லியத்தின் மனைவியான கேட் மிடில்டன் ’Mama’ என உரிமையுடன் அழைத்து வருகிறார்.

மகாராணியுடன் நெருங்கிப்பழகி வரும் மேகன் மெர்க்கலும் இனிமேல் மகாராணியாரை Mama என அழைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இளவரசர் வில்லியம் மகாராணியாரை ’Gary’ என அழைக்கும்போது அவரது புதல்வர் குட்டி இளவரசர் ஜோர்ஜ் ‘Gan Gan’என அழைத்து வருகிறாராம்

குழந்தையாக இருக்கும்போது ஒருமுறை தடுமாறி விழுந்து அழுத குட்டி இளவரசர் வில்லியம் வாய்விட்டு ’Gary’ என அழைத்துள்ளார்.

அரண்மனை உறுப்பினர்கள் அனைவரும் யாரை குறிப்பிடுகிறார் என குழம்பிப்போய் நின்ற நிலையில் மகாராணியார் முன்வந்து நாந்தான் அந்த ’Gary’ என பகிரங்கமாக தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரித்தானிய அரச குடும்பத்தின் புது உறுப்பினரான மேகன் மெர்க்கலுக்கு அவரது மாமனார் பட்டத்து இளவரசர் சார்லஸ் ஏற்கெனவே Tungsten என்ற பட்டப்பெயர் ஒன்றை வழங்கியுள்ளார்

செயிண்ட் ஆண்ட்ரூ பல்கலைக்கழகத்தில் படித்த காலகட்டத்தில் ஸ்டீவ் என்ற பெயரில் இளவரசர் வில்லியம் அறியப்பட்டு வந்துள்ளார்.

pike என்ற பெயரில் இளவரசர் ஹரி அறியப்பட்டுள்ளார். மட்டுமின்றி Spike wells என்ற பெயரில் இளவரசர் ஹரி பேஸ்புக் கணக்கு ஒன்றையும் வைத்திருந்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five − four =

*