;
Athirady Tamil News

மரணித்தும் தீராக்காதல்! பிரித்தானிய பெண்மணியை திருமணம் செய்துகொண்ட அகதியின் நெகிழ்ச்சி கதை..!!

0

கறுப்பினத்தை சேர்ந்த நபர் பிரித்தானியாவிற்கு அகதியாக சென்றபோது அந்நாட்டில் பிரித்தானிய வெள்ளையின பெண்மணியின் மீது காதல் கொண்டு சுமார் 60 வருடங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தியுள்ளார்.

இவர்களின் அழகிய காதல் காதல் நிறைந்த திருமண வாழ்க்கை 24 Hours In A&E எனும் நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளது.

Dominica நாட்டை சேர்ந்த Andrew Augustus 1950 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு அகதியாக சென்றுள்ளார். அங்கு வாரத்திற்கு 5 பவுண்ட் சம்பளத்தில் தச்சு வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த வருமானத்தை வைத்து தான் தங்கியிருந்த அறை மற்றும் உணவுக்கான தொகையை கொடுத்துள்ளார். இந்த பணம் இவருக்கு போதவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு தனது வாழ்க்கையை நடத்தி வந்த இவர், fur department – இல் பணியாற்றி வந்த Doreen ஐ சந்தித்துள்ளார்

பிரித்தானியாவை சேர்ந்த வெள்ளையின பெண்மணி ஆவார். தான் வேலைபார்க்கும் இடத்தில் இருந்து Doreen யின் அழகினை ஒவ்வொரு நாளும் ரசித்துள்ளார் Andrew. பார்ப்பதற்கு சுருள் முடியுடன் மொடல் அழகி போன்ற இருந்துள்னார் Doreen.

இந்த பார்வையே, ஒரு நாள் இவர்கள் சந்திக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தது. அதன்பிறகு நண்பர்களான இவர்கள், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். ஆனால், வழக்கம்போல இனவெறி கருத்துக்கள் இவர்களது குடும்பத்திலேயே எழுந்தன.

இருப்பினும் இனவெறி மறைந்து காதல் தலைதூக்கியதால் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அழகான திருமண வாழ்க்கைக்கு சாட்சியாக இரண்டு குழந்தைகள் பிறந்தனர்

காதலிக்கும்போது இவர்கள் இருவருக்குள்ளும் இருந்த காதல், 60 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் சிறிதும் கூட குறையவில்லை. கடந்த மாதம் தான் Doreen தனது 87 வது வயதில் உயிரிழந்தார்.

தனது காதல் மனைவியின் கடைசி நிமிடம் குறித்து Andrew கூறியதாவது, அவள் என்னைவிட்டு பிரிந்தாலும் இன்றும் என்னுடன் தான் இருக்கிறாள். எங்கள் திருமண வாழ்க்கையில் ஒருவர் மீது ஒருவர் மிகவும் அன்பு வைத்திருந்தோம்.

அவள் இந்த உலகத்தை விட்டு சென்ற கடைசி நாள், காலையில் அமர்ந்து நானும் அவளும் காபி குடித்துக்கொண்டிருந்தோம், அப்போது வழக்கம்போல காபி குடித்துவிட்டு மருந்தினை சாப்பிட்டவள்..லேசாக என்னை பார்த்து கண்ணை மூடினாள்

மீண்டும் கண்ணை திறந்த அவள், என்னை கடைசியாக ஒரு பார்வை பார்த்தாள். அந்த நொடியே அவளது உயிர் பிரிந்தது. அவளின் கடைசி பார்வை இன்னும் என்னால் மறக்க இயலவில்லை. தற்போது நான் எனது மகளுடன் வசித்து வருகிறேன்.

எனது மகள் லண்டனில் பணியாற்றி வருகிறாள் என கூறியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × one =

*