;
Athirady Tamil News

45 வயது காதலியை கொலை செய்து, மூளையை வறுத்து தின்ற 21 வயது ரஷ்ய இளைஞர்..!! வீடியோ

0

ரஷ்யாவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் தனது 45 வயது காதலியைக் கொலை செய்து அவரது மூளையை வறுத்து தின்று அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சீரியல் கில்லர்கள் குறித்து படிப்பதில் அதிக ஆர்வமுடைய டிமிரிட்டி லிசின் 21 (Dmitry Luchin) அடிக்கடி மனிதர்களைக் கொன்று தின்னும் சடங்குகள் குறித்து வாசிப்பது வழக்கம்.

அந்தவகையில் 1978 லிருந்து 1991க்கு இடைப்பட்ட காலத்தில் 17 சிறுவர்கள் மற்றும் ஆண்களைக் கற்பழித்து படுபயங்கரமாக கொலை செய்து அவர்களை சமைத்து தின்ற ”மில்வாக்கே கேனிபல் ஜெஃப்ரி லையனல் டஹ்மர்”ஐ (Jeffrey Lionel Dahmer) குறித்து இணையத்தில் டிமிரிட்டி லிசின் படித்துள்ளான்.

இதை படித்த டிமிரிட்டி லிசினுக்கு நரமாமிசம் சாப்பிடும் ஆசை ஏற்பட்டுத்துள்ளது.

அந்த நேரத்தில் டிமிரிட்டியின் 45 வயது காதலி ஒலாகா புடுனோவா, சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதற்காக டிமிரிட்டியின் வீட்டிற்கு வர, தனது காதலியைக் கொன்று சாப்பிட டிமிரிட்டி முடிவு செய்துள்ளான்.

பின்னர் ஒலாகா தலையில் ஒயின் பாட்டிலால் 25 முறை அடித்துக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளான்.

பின்னர் தன் காதலியின் மண்டை ஓட்டை பிளந்து அதிலிருந்த ரத்தத்தை எடுத்து தன்னுடைய வீட்டின் கதவில் பிசாசின் அடையாளத்தை வரைந்து பேய் வருவதற்காக காத்திருந்துள்ளான்.

ஆனால் அப்படி எந்த பேயும் வராததால் அவளது மூளையை எடுத்து ஒரு துண்டை மட்டும் வறுத்துத் தின்றிருக்கிறான். அதன் சுவை அவனுக்கு பிடித்துப் போக மீதமுள்ள மூளையையும் வறுத்துத் தின்று ரத்தத்தை குடித்திருக்கிறான்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × five =

*