;
Athirady Tamil News

கல்வி சான்றிதழில் தவறான தகவல்களை வழங்கிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மீது வழக்குபதிவு..!!

0

ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வான பாடே சிங், தேர்தல் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள கல்வி சான்றிதழில் தவறான தகவல்களை வழங்கியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேசத்தில் 12-ம் வகுப்பு முடித்திருப்பதாகவும், சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் பட்டம் பயின்றதாகவும் பாடே சிங், வேட்பு மனுவில் இணைத்துள்ள கல்வி சான்றிதழில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இது தவறான தகவல் என கூறி டெல்லியில் உள்ள கோகல்பூரி பகுதியில் வசிக்கும் போல்ராம் என்பவர் வடகிழக்கு டெல்லியில் உள்ள நந்த் நாகரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் தொடர்பாக நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + 11 =

*