;
Athirady Tamil News

வடக்கு முதலைமைச்சர், தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்த மாகாணசபை தேர்தலிலே ஒற்றுமைப்பட்டு ஆட்சியை தக்கவைக்க வேண்டும்! வன்னி பாராளுமன்ற உறுப்பினர்..!!

0

எனவே எமது முதலைமைச்சர், தமிழ்தேசிய கூட்டமைப்பு, ஏனைய கட்சிகள் இந்த மாகாணசபை தேர்தலிலே ஒற்றுமைப்பட்டு எங்களுடைய ஆட்சியை தக்கவைக்க வேண்டும். என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் தெரிவித்தார் வவுனியா நகரசபை மைதானத்தில் (21) நடைபெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுபோட்டியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
தொடர்ந்து கருத்து தெரிவித்த பாரளுமன்ற உறுப்பினர்

அகிம்சை போராட்டங்கள் தந்தை செல்வாவினால் ஒருங்கினைக்கப்பட்ட காலத்தில்; ஆயுத போராட்டத்தை தொடக்குவதற்கான அடித்தளமாக 1983 ம்; ஆண்டில் இடம்பெற்ற வெலிக்கடை படுகொலைகளை கூறலாம்.
ஆரம்ப காலங்களில் தமிழீழ விடுதலைகழகத்தில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இனத்தின் விடுதலைக்காக இணைந்து போராடினார்கள்.எமது விடுதலை புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் கூட எமது இயக்கதில் இருந்தே பிரிந்து சென்றார்.அப்படி வரலாறு கொண்ட எமது இயக்கம் பல சாதனைகளை இலங்கை அரசுக்கு எதிராக செய்திருந்தது. ஆயுத போராட்டதின் ஊடாக இலங்கை அரசை அடிபணிய வைத்த காலங்கள் உண்டு அதன் மூலம் அரசு எதனை வேண்டுமானாலும் தரலாம் என்ற நிலையிலே தன்னுடைய சிந்தனையை மாற்றுமளவுக்கு ஆயுத போராட்டம் வலிமையுடையதாகவிருந்தது.

ஆனால் இன்றும் பல ஏமாற்றங்களுடன் எமது மக்களின் போராட்டங்கள் தொடர்வதை எண்ணி நாம் மிகவும் கவலை அடைகின்றோம். என்னை பொறுத்தவரை ஆயுத போராட்டம் தான் அரசியல் ரீதியான விடுதலையை பெற்றுக் கொடுப்பதற்கான பேச்சுவார்த்தையை உண்டு பண்ணகூடிய வல்லமை கொண்டதாக இருக்கிறது. இருந்தது ஆனால் அந்த வல்லமை இப்போழுது இல்லை. கடந்தகால கால நிலமை இருந்திருந்தால் நாம் ஈழத்தை பெற்று எமது மக்களுக்hன விடுதலையை அடைந்திருக்க முடியும் என்று எண்ண தோன்றுகிறது..

போராட்டங்கள் மௌனிக்கப்பட்ட பின்பு எமது மக்கள் அதனை கையில் எடுத்திருக்கிறார்கள் அது காணாமல் போனோர் போராட்டம், நிலமீட்பு போராட்டம் ,அரசியல் கைதிகளின் போராட்டம் என நீண்டுகொண்டு செல்கிறது. மக்கள் இவற்றை கையில் எடுத்தாலும் கூட இந்த அரசாங்கம் தன்னுடைய சிந்தனையில் இருந்து கொஞ்சமும் மாற்றத்தை கொண்டுவரவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

தற்போது; மக்களது விடுதலையை பெற்றுக் கொடுப்பதற்காக அரசியல் ரீதியான செயற்பாட்டிலே நாங்கள் சர்வதேசத்தை நாடவேண்டும் என்ற அர்த்தத்துடன் தான் எமது செயற்பாடுகள் இருக்கிறதே தவிர அரசுக்கு நாங்கள் சரணாகதி ஆகவில்லை என்பதை இங்கு நான் கூறிக்கொள்கிறேன்.

காணாமல் போனவர்களுக்காக காரியாலயம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. எங்களை பொறுத்தவரை அதிலே வெளிநாட்டு நீதிபதிகளையும். சட்டத்தரணிகளும் நியமிக்கபடவேண்டும் என்பதை நாம் வலியுறுத்தி வருகின்றோம். இங்கு வருகின்ற தூதுவர்களிடம் அதனை நாம் வலியுறுத்தியபடிதான் இருக்கிறோம்.அதனை நடைமுறைப்படுத்தப்படுவதற்காக நாம் முயற்சியும் எடுத்து வருகின்றோம். இயக்கங்கள் எவ்வாறு பிரிந்து நின்று செயற்பட்டதோ அதே போல் தமிழர்களிடத்திலும் இன்று ஒற்றுமை இல்லை. அன்று பிரிந்து நின்றாலும் அனைவரும் அரசாங்கத்தை எதிர்தோம்.இன்று எங்களுக்குள்ளே பிரிந்து விமர்சனம் செய்பவர்களாக, சண்டையிடு;பவர்களாக மாறி இருக்கிறோம். எங்கள் இனத்தின் விடுதலை என்பதை நாம் மறந்திருக்கிறோம் என்பதை கவலையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

அன்று இனத்தின் விடுதலைக்காக இளைஞர்கள் ஆயுதங்களை கையில் எடுத்தார்களோ அதுபோல இன்று இருக்கும் கட்சிகள் ஐனநாயக ரீதியிலே; ஒன்றாக இணைந்து எமது மக்களின் விடுதலைக்காக ஒன்றினைய வேண்டும். தேசியத்தை கருத்தில் கொண்டவர்கள் ஒன்றினைய வேண்டும் என்பது எனது கருத்து.

இன்று மாகாணசபை இரண்டு மூன்று பிரிவுகளாக செயற்படும்; விதமாக பல நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. தமிழர்கள் ஆழ்கின்ற மாகாணசபையை யாரும் ஆண்டுவிடலாம் என்று நாம் எண்ணி விடக்கூடாது. எமது மக்களின் எண்ணங்கள்,சிந்தனைகள், அடிப்படை வாழ்கை, அரசியல் விடுதலை என்பவற்றை இந்த மாகாண சபையூடாக பெறக்கூடிய திறன் இந்த மாகாணசபைக்கு இருக்கிறது.

எனவே வருகின்ற மாகாணசபையிலே நாங்கள் பிரிந்து நிற்போமாக இருந்தால் இன்று நாகரசபை, பிரதேச சபைகளிலே தென்னிலங்கை கட்சிகள் எவ்வாறு தமது கால்களை பதித்தார்களோ அதனைவிட மோசமாக அவர்களுடன் இணைந்து ஆட்சி நடாத்தகூடிய துரப்;பாக்கிய நிலைக்கு மாகாணசபை தள்ளபட கூடிய வாய்ப்பை ஒரு நாளும் நாம் ஏற்படுத்திவிட முடியாது. அதனை ஒரு வினைத்திறனான மாகாண சபையாக உருவாக்க வேண்டுமாகவிருந்தால் நாம் அனைவரும் ஒன்றினைய வேண்டும். எனவே வெறுமனே மேடைகளிலோ பத்திரிகைகளிலோ மக்கள் விடுதலை பற்றி பேசி உளரீதியான பிரிவினையை உள்ளத்திலே வைத்திருந்து, மக்களுக்காக செயற்படுவர்களாக தம்மை காட்டிகொள்பவர்களை மக்கள் என்றுமே மன்னிக்க மாட்டார்கள். என்பதை இங்கு நாம் குறிப்பிட வேண்டும்.

எனவே எமது முதலைமைச்சர், தமிழ்தேசிய கூட்டமைப்பு, ஏனைய கட்சிகள் இந்த மாகாணசபை தேர்தலிலே ஒற்றுமைப்பட்டு எங்களுடைய ஆட்சியை தக்கவைக்க வேண்டும். அதற்காக தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தொட்ர்ந்து செயற்படுவதுடன்; ஒற்றுமையை விரும்பாதவர்களுடன் பயணிக்காது என்பதையும் கூறிக்கொள்கிறேன்.
ஐனநாயக ரீதியான போராட்டமாக இருந்தாலும், ஆயுத போராட்டமாக இருந்தாலும் சரி ஒரே இலட்சியம் மக்களின் விடுதலை மட்டுமே என்பதை நினைவில் கொண்டு தேசியத்தை விரும்பும் கட்சிகள் அனைவரும் மனதில் நிலைநிறுத்த வேண்டும். கிழக்கு மாகாணத்திலும் நாம் ஆட்சியை நடாத்தும் வல்லமையுடன் இருக்கிறோம் அவை அனைத்திற்கும் ஒற்றுமையே அவசியம் என்று கூறினார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + one =

*