;
Athirady Tamil News

275 ஓட்டங்களில் போட்டியை இடை நிறுத்திய இலங்கை அணி..!!

0

இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இன்னிங்ஸை இலங்கை அணி 5 விக்கட் இழப்புக்கு 275 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டியை இடை நிறுத்தியுள்ளது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3 ஆம் நாள் துடுப்பாட்டம் இப்போது இடம்பெற்று வருகிறது.

போட்டியின், தமது 2 ஆவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி 5 விக்கட்டுக்களை இழந்த 275 275 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டியை இடை நிறுத்திக்கொண்டது.

முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 214 ஓட்டங்கள் முன்நிலையில் இருந்ததுடன் இரண்டாவது இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் சேர்த்து 490 ஓட்டங்களை தென் ஆபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது.

இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன 85 ஓட்டங்களையும் அஞ்சலோ மெத்தியூஸ் 71 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் தென் ஆபிரிக்க அணி சார்பில் கேஷவ் மஹாராஜ் 154 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கட்டுக்களை பெற்றுள்ளார்.

முன்னதாக இரு அணிகளுக்கும் இடையில் காலியில் நடைபெற்ற 1 வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வெற்றி கொண்டு, இலங்கை அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை கூறத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 13 =

*