;
Athirady Tamil News

கடலில் நீராட சென்ற பெண் குழந்தைகள் இருவர் பலி..!!

0

களுத்துறை கெலிடோ கடற்கரை பகுதியில் கடலில் குளிக்க சென்ற இரண்டு பெண் குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

குழுவொன்று கடலில் நீராட சென்ற சந்தர்ப்பத்தில் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தந்தை, தாய், மகள் மற்றும் பெண் குழந்தை ஒன்றுமே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடற்படையினர் அவர்களை காப்பாற்றி களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் பெண் குழந்தைகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 11 வயதுடைய பெண் குழந்தைகள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 5 =

*