;
Athirady Tamil News

நாகர்கோவில் அருகே வாலிபர்-உறவுப்பெண் ஒரே நேரத்தில் தற்கொலை..!!

0

நாகர்கோவில் அருகே உள்ள மங்காவிளை காளியான்விளையைச் சேர்ந்தவர் சுரேஷ். கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி லாவண்யா (வயது 24). இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு மகனும், ஒரு வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று காலை சுரேஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் லாவண்யாவும், குழந்தைகளும் இருந்தனர்.அவர்களை பார்ப்பதற்காக லாவண்யாவின் தாயார் பாப்பா வீட்டுக்கு வந்தார். அப்போது லாவண்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கினார். மகளின் உடலை பார்த்து அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

லாவண்யா இறந்த அதேசமயத்தில் மங்காவிளை குடியிருப்பு தெருவைச் சேர்ந்த அருண்பிரகாஷ் (23) என்ற வாலிபரும் தூக்குப்போட்டு இறந்திருந்தார். லாவண்யாவும், அருண் பிரகாசும் நெருங்கிய உறவினர்கள் ஆவர். 2 பேரின் பிணத்தையும் ஈத்தாமொழி போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உறவினர்களான லாவண் யாவும், அருண்பிரகாசும் சொல்லி வைத்தாற்போல் ஒரே நேரத்தில் இறந்தது ஏன்? என்பது மர்மமாகவே உள்ளது. லாவண்யாவின் கணவர் சுரேசுடன், அருண்பிரகாஷ் ஒன்றாக வேலைக்கு சென்று வந்தார். மேலும் உறவினர்கள் என்பதால் லாவண்யாவின் வீட்டுக்கும் அடிக்கடி அருண்பிரகாஷ் சென்று வந்துள்ளார்.

நேற்று சுரேஷ், அருண்பிரகாஷ், அவரது சகோதரர் ஆகிய 3 பேரும் சேர்ந்து தான் வேலைக்கு சென்று உள்ளனர். அதன்பிறகு பாதியிலேயே திரும்பி வந்த அருண்பிரகாஷ், வீட்டுக்கு சென்று தற்கொலை செய்துள்ளார்.

உறவினர்களுக்கு இடையே ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு அந்த விவகாரத்தில் லாவண்யாவும், அருண்பிரகாசும் பேசி வைத்து தற்கொலை செய்தார்களா? அல்லது 2 பேரும் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் தற்கொலை செய்தார்களா? என்று தெரியவில்லை.

ஆர்.டி.ஓ. விசாரணை

இதற்கிடையே லாவண்யாவுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் அவரது சாவு குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது. லாவண்யாவின் தாயார் போலீசாரிடம் கூறுகையில் எனது மகள், நேற்றுமுன்தினம் பொழிக்கரை புதூரில் உள்ள எங்கள் வீட்டுக்கு வருவதாக கூறியிருந்தார். நேற்று வரை லாவண்யா வராததால் அவரை தேடி வீட்டுக்கு சென்றேன். அங்கு அவர் இறந்து கிடந்தார் என கூறி உள்ளார்.

லாவண்யாவும், அருண்பிரகாசும் தற்கொலை செய்து கொண்டது அவர்களது உறவினர்களையும், குடும்பத்தினரையும் பெரும் சோகத்துக்கு ஆளாக்கி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − four =

*