;
Athirady Tamil News

கனடாவில் காட்டுத் தீ – 2 ஆயிரம் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்..!!

0

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் காட்டுத்தீ பரவி வருகிறது. அங்கு சுமார் 7 இடங்களில் தீப்பிடித்து எரிகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது.

எனவே அங்குள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளில் வசிப்போர் அங்கிருந்து வெளியேற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான பெரிய திராட்சை தோட்டங்கள் உள்ளன.

எனவே இவற்றை காட்டுத் தீயில் இருந்து மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏரிகளில் இருந்து நீர் எடுத்து இவற்றை ஹெலிகாப்டர்கள் மூலம் தெளித்து வருகின்றனர்.

இதற்கிடையே காட்டுத்தீ வேகமாக பரவுவதால் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் பல மின்கம்பங்கள், மின் கம்பிகள் எரிந்து நாசமாகி விட்டன. எனவே பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × one =

*