;
Athirady Tamil News

அமர்நாத் யாத்திரை சென்ற டெல்லி பக்தர் மாரடைப்பால் பலி..!!

0

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஜூன் 28-ம் தேதி முதல் யாத்ரிகர்கள் குழு புறப்பட்டு சென்றது.

இன்று அதிகாலை பகவதி நகர் மலையடிவார முகாமில் இருந்து 1,202 யாத்ரிகர்கள் அடங்கிய 23-வது குழு 42 வாகனங்களில்புறப்பட்டு சென்றது.

இதற்கிடையில், சாலை விபத்து மற்றும் மாரடைப்பு காரணமாக சில பக்தர்களும் அவர்களுக்கு உதவியாக இருந்த சேவகர்களும் இந்த ஆண்டு யாத்திரை காலத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லியை சேர்ந்த ரமேஷ் சந்த் என்னும் 70 வயது பக்தருக்கு ஆலயத்துக்கு செல்லும் வழியில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உயிர் வரும் வழியிலேயே பிரிந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இவருடன் சேர்த்து இந்த ஆண்டின் யாத்திரை காலத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + 5 =

*