;
Athirady Tamil News

நாட்டில் நடைபெறும் தாக்குதல் சம்பவங்களுக்கு பா.ஜ.க பொறுப்பேற்க வேண்டும் – மம்தா பானர்ஜி..!

0

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அப்பாவி மக்களை கடுமையாக தாக்கி கொலை செய்யும் சம்பவங்கள் வடமாநிலங்களில் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது. மேலும், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் குழந்தை கடத்தல் வதந்திகளை நம்பி பலர் அப்பாவிகளை அடித்துக்கொன்றுள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ‘ நாடுமுழுதும் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பா.ஜ.க.வினரின் வெறுப்பு பிரச்சாரம் தான் காரணம். ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பசு குண்டர்களால் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ள சம்பவத்திற்கு பாராளுமன்றத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆனால், இம்மாதிரியான சம்பவங்களில் கண்டனம் தெரிவிப்பதற்கு பதிலாக, அவர்கள் கட்சியில் உள்ள மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரையிலான நிர்வாகிகளை கட்டுப்படுத்தாமல் இருப்பது ஏன் ?. நாட்டில் நடத்தப்படும் தாக்குதல் சம்வங்களுக்கு பா.ஜ.க தான் பொறுப்பேற்க வேண்டும்.

மேற்கு வங்காளத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று இருந்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும். கும்பலாக நடத்தப்படும் தாக்குதல் சம்வங்களில் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, இதுபோன்ற சம்வங்கள் நடைபெறுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் ‘.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 2 =

*