வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது..!!

வெளிநாட்டு நாணயத்தாள்களை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த ஒருவரை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக இலங்கை சுங்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் சிங்கப்பூர் நட்டின் பிரஜை எனவும் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு நாணயத்தாள்களின் பெறுமதி இலங்கை ரூபாவில் 15 மில்லியன் ஆகும் எனவும் சுங்கப்பிரிவு அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.