;
Athirady Tamil News

வடமாகாணசபை உறுப்பினரால் பொது அமைப்புக்களுக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு..!!

0

வடமாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாவினால் வவுனியாவில் பொது அமைப்புக்களுக்கு இன்று (24) ஒரு தொகுதி கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டது.

2018ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம், சாளம்பக்குளம் சிறி முத்தமாரி அம்மன் ஆலயம், தோணிக்கல் பெதஸ்தாமிசன் தேவாலயம், கள்ளிக்குளம் சீயோன் சுவிஷேசசபை. போன்ற இந்து, கிறிஸ்தவ ஆலங்களுக்கான பிளாஸ்ரிக் கதிரைகள் வவுனியா பிரதேச செயலகத்தில் வைத்து ஆலய நிர்வாகத்திடம் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் மற்றும் திட்டமிடல் பகுதி உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + nineteen =

*