காப்பகத்தில் சிறுமிகள் பலாத்காரம்- பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்..!!

பீகார் மாநிலம் முசாபர்நகரில் செயல்பட்டு வரும் சிறுமிகள் காப்பகத்தில் தங்கியிருக்கும் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது சமீபத்தில் தெரியவந்தது. இதையடுத்து, காப்பக உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், பீகார் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக பாராளுமன்றத்தில் விதிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இதற்காக காங்கிரஸ் எம்.பி. ரஞ்ஜீத் ரஞ்சன் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி. ஜே.பி.யாதவ் ஆகியோர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தனர்.
இதேபோல் மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் நிகழும் வன்முறைகள் தொடர்பாக மக்களவையில் ஜீரோ அவரில் விவாதிக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. முகமது சலீம் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.