;
Athirady Tamil News

கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் ஆய்வுகூடத்தில் தீ..!!

0

கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் தீப்பரவல் சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது.

இன்று காலை இந்த தீப்பரவல் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு மாடிகளைக் கொண்ட கட்டிடத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள விஞ்ஞான ஆய்வுகூடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தீயினால் ஆய்வுகூடம் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு படையினரின் 04 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மின் ஒழுக்கு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + nineteen =

*